2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 01 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார்.

தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார்.

இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார்.

ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். நான்காம், ஐந்தாம் இடங்களை ரெட்புல் அணியின் டனில் குவையாட், டேனியல் ரிக்கியார்டோ பெற்றனர்.

கடந்த வாரம் ஐக்கிய அமெரிக்க கிரான்ட்பீறிக்ஸில் ரோஸ்பேர்க்கை தோற்கடித்து ஹமில்டன் வெற்றி கொண்டிருந்தபோது மூன்றாவது தடவையாக உலக சம்பியனாக முடிசூடிக்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .