Shanmugan Murugavel / 2015 நவம்பர் 01 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைப் போன்று, நியூசிலாந்து அணியின் சொனி பில் வில்லியம்ஸின் உயர்ந்த நடத்தையும், இறுதிப் போட்டியில் அதிகம் கவனிக்கப்படும், பாராட்டப்படும் ஒன்றாக மாறிப் போனது.
நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, நியூசிலாந்து வீரர்கள், மைதானத்தைச் சுற்றிவர முயன்ற போது, 14 வயதான நியூசிலாந்து இரசிகனான சார்லி லைன்ஸ், தனது கதாநாயகனான பில் வில்லிம்ஸை நோக்கிச் செல்ல முயன்றான். எனினும், பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதன் காரணமாக அவனைப் பின்தொடர்ந்த பாதுகாப்பு அதிகாரி, அவனைத் தடக்கிக் கீழே வீழ்த்தினார்.
இதனைக் கண்ட பில் வில்லியம்ஸ், அந்தப் பாதுகாப்பு அதிகாரியிடமிருந்து லைன்ஸைப் பிரித்து, அவன் பார்வையாளர் அரங்கு நோக்கிப் பாதுகாப்பாகச் செல்வதை உறுதிப்படுத்தியதோடு, அங்கு வைத்து, தனக்கான உலகக் கிண்ண வெற்றியாளர் பதக்கத்தை அவனுக்கு அணிவித்தார்.
பலருக்கும், உலகக் கிண்ணப் பதக்கமொன்றைப் பெற்றுக் கொள்வது கனவாக இருக்கும் போது, தனக்குக் கிடைத்த பதக்கத்தை அவர் அணிவித்தமை, பலரது பாராட்டையும் ஆச்சரியத்தையும் பெற்றது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், 'அது என்னுடைய தம்பியாகவோ அல்லது மைத்துனனாகவோ இருந்திருந்தால், அந்தப் பாதுகாப்பு அதிகாரிக்கு அறைந்திருந்பேன். ஆனால் நான், அந்தச் சிறவனைத் தூக்கி, அவனது பாதுகாவலருடன் சேர்த்ததோடு, அந்த இரவு, அவனுக்கு ஞாபகமிக்கதாக இருக்க விரும்பினேன். என்னுடைய கழுத்தை விட அவனது கழுத்தில் பதக்கம் தொங்குவது தான் சிறப்பானது" எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .