2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

மாலைதீவு ஜனாதிபதி படகு வெடிப்பு குண்டால்தான் என்பதற்கு ஆதாரமில்லை

Administrator   / 2015 நவம்பர் 01 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த மாதம் மாலைதீவு ஜனாதிபதி பயணம் செய்த அதிவேகப் படகில் ஏற்ப்பட்ட வெடிப்பு, குண்டினாலேயே ஏற்ப்பட்டது என்பதற்கான ஆதாராங்கள் எதுவுமில்லை என ஐக்கிய அமெரிக்காவின் எஃப்‌பி‌ஐ தெரிவித்துள்ளது.

விசாரணை செய்யுமாறு வினவப்பட்ட சிதைவுகள், படகினுடைய பகுதிகளே என்று தெரிவித்துள்ள எஃப்‌பி‌ஐ, மாறாக அவை குண்டொன்றினுடைய எச்சங்கள் அல்ல என எஃப்‌பி‌ஐ சனிக்கிழமை (31)  வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளது.

வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட தடயவியல் பகுப்பாய்வு, அவ்விடத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்களின் பகுப்பாய்வு முடிவு, இரசாயனவியல் பகுப்பாய்வு உள்ளடங்கலான எஃப்‌பி‌ஐ இன் பகுப்பாய்வின் அடிப்படையில், படகில் ஏற்பட்ட வெடிப்பானது, வெடிக்கும் சாதனம் ஒன்றினாலேயே ஏற்படுத்தப்பட்டது என்று தீர்க்கமான ஆதாரங்கள் இல்லை என எஃப்‌பி‌ஐ இன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படகு வெடிப்பு தொடர்பாக நான்கு நாடுகள் விசாரணைகள் மேற்கொண்டிருந்த நிலையில், இலங்கையே முதலில் விசாரணையை முடித்து, இந்த வெடிப்பு குண்டுவெடிப்பால்தான் ஏற்பட்டது என அறிக்கையாளித்திருந்தது.

விமானநிலையம் உள்ள தீவில் இருந்து தலைநகருக்கு ஜனாதிபதி யமீன் அப்துல் கயூமும் அவரது மனைவியும் செப்டெம்பர் 28ஆம் திகதி சென்று கொண்டிருந்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றிருந்தது. இதில், ஜனாதிபதிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென்ற போதும் அவரது மனைவியும் உதவியாளர் ஒருவரும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் காயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து, துணை ஜனாதிபதி அஹமட் அதீப், ஜனாதிபதியைத் கொல்ல திட்டமிட்டார் என அரசாங்கம் குற்றம்சாட்டியிருந்தது. தொடர்ந்து, கடந்த வாரம் அதீப் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் அவர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தார்.

 

அதிருப்தியடைந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்ற முனைகின்றனர் என்பதை மறுத்திருந்திருந்த மாலைதீவுகள் வெளிவிவகார அமைச்சர் துன்யா மஹ்மூன், ஜனாதிபதி யமீன், அவரது பதவியில் நிலைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மாலைதீவில் முதன்முறையாக ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் நஷீட் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் 13 வருட சிறைத்தண்டனை வழக்கப்பட்டது உள்ளடங்கலாக அதிருப்தி அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டமையை  அடுத்து வீதி வழி ஆர்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X