2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 05 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே பிரிஸ்பேர்ணில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 389 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தற்போது களத்தில் இரண்டு வருடங்களின் பின் அணியில் இடம்பிடித்த உஸ்மான் காவஜா 102 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உப அணித்தலைவர் டேவிட் வோணர் 163 ஓட்டங்களுடனும் ஜோ பேர்ன்ஸ் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி, ஜேம்ஸ் நீஷம் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக காணப்பட்ட போதும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசாமல், அதிகளவிலான ஓட்டம் பெறும் பந்துகளை வீசியிருந்த நிலையில் இலகுவாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறக்கூடியதாக இருந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .