Shanmugan Murugavel / 2015 நவம்பர் 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
284 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டிருந்த இங்கிலாந்து, 2 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களுடன் இன்றைய இறுதி 5ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், தொடக்கம் முதல் தடுமாறிய அவ்வணி, 22 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், 156 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 127 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
அணித்தலைவர் அலஸ்டெயர் குக், ஆட்டமிழக்காமல் 63 (164) ஓட்டங்களைப் பெற்றதோடு, போராட்டத்தை வெளிப்படுத்திய அடில் ரஷீத், 22 (72) ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில், யசீர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷொய்ப் மலிக் 3 விக்கெட்டுகளையும் சுல்பிகர் பாபர் 2 விக்கெட்டுகளையும் றஹாத் அலி ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 234 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழக்க, இங்கிலாந்து அணி 306 ஓட்டங்களைப் பெற்றது. தனது இரண்டாவது இனிங்ஸில், மொஹமட் ஹபீஸின் 151 ஓட்டங்களின் துணையோடு 355 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான், 284 ஓட்டங்களை இலக்காக வழங்கியிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக மொஹமட் ஹபீஸ் தெரிவானதோடு, தொடரின் நாயகனாக யசீர் ஷா தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .