2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

குழம்பிய டேவிட் பூண்: பந்துவீசிய சாமுவேல்ஸ்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 05 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராகச் செயற்பட்ட மார்லன் சாமுவேல்ஸ், சர்வதேசக் கிரிக்கெட் சபையின் போட்டி மத்தியஸ்தரான டேவிட் பூணின் தவறால், பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சாமுவேல்ஸ், 14 நாட்களுக்குள் அதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, அவ்வாறு சோதிக்கப்பட்டால், அதன் முடிவுகள் வரும்வரை பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

ஆனால், குறித்த காலத்தை 21 நாட்கள் என டேவிட் பூண் அறிவிக்க, போட்டி ஆரம்பித்த பின்னரே சாமுவேல்ஸ் பந்துவீச அனுமதிக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கெனவே அணி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இது அறிவிக்கப்பட்டமை குறித்து அணி நிர்வாகம் அதிருப்தியை வெளிப்படுத்தியதையடுத்து, அப்போட்டியில் பந்துவீச, சாமுவேல்ஸூக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X