2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 07

Kogilavani   / 2015 நவம்பர் 07 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.

1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை, ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20வீத மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.

1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.

1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.

1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

1996 - நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .