2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 08 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது.

வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், ஒரு போட்டியில் சராசரியாக 0.6528 சதங்கள் பெறப்படுகின்றன. இவ்வாண்டு இதுவரை, 133 போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் சராசரியாக 0.7593 சதங்கள் பெறப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X