Shanmugan Murugavel / 2015 நவம்பர் 08 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது சீர்திருத்தக் கோரிக்கைகள் கேட்கப்படாது விட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து இருப்பது தொடர்பில் தான் மீண்டும் சிந்திக்க வேண்டி ஏற்படும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஐரோப்பியத் தலைவர்களை எச்சரிக்கவுள்ளார்.
பிரித்தானியாவுக்காக வேண்டப்படும் மாற்றங்கள் தொடர்பில் ஐரோப்பிய சபையின் தலைவருக்கு கடிதம் வரையவுள்ள, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், சமகாலத்தில் நாளை தனது எச்சரிக்கையையும் விடுக்கவுள்ளார்.
டொனால்ட் டஸ்க்குக்கு வரையப்படவுள்ள மேற்படிக் கடிதம் மூலம், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புரிமை தொடர்பில் முறையாக பேச்சுவார்த்தையை பிரித்தானியா ஆரம்பிக்கின்றது.
கடந்த தேர்தலின் போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதா, வெளியேறுவதா என்பது தொடர்பில் 2017ஆம் ஆண்டு வாக்களிப்பு இடம்பெறும் என பழமைவாதக் கட்சி உறுதியளித்தே ஆட்சிக்கு வந்திருந்தது.
முன்னர் இம்மாத ஆரம்பத்தில், கமரூன், தனக்கு கடிதம் வரைபதை வரவேற்ற டஸ்க், இதன் மூலமே நாங்கள் முறையான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் எனக் கூறியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .