Shanmugan Murugavel / 2015 நவம்பர் 08 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவின் ஆளுகை குறித்தான சமசரங்கள் எவற்றுக்கும் இடம் கிடையாது எனவும், மொரோக்கோவின் கீழ் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனவும், அந்நாட்டின் அரசர் மொஹமட் ஏஐ தெரிவித்துள்ளார்.
மேற்கு சஹாரா மீதான ஆளுகை தொடர்பாக பல நாடுகள் தங்களது கோரிக்கையை விடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக நான்கு தசாப்தங்களாகக் குழப்பம் காணப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான பேரம் பேசலை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை, அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையிலேயே, பிராந்தியத்துக்குத் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனத் தெரிவித்த அரசர், 'மொரோக்கோ வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இதுதான்" எனத் தெரிவித்தார்.
மொரோக்கோ வழங்கக்கூடிய ஏதாவது 'சலுகைகளுக்காக எதிர்பார்த்திருப்போர், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். வழங்கக்கூடிய எல்லாவற்றையும், மொரோக்கோ ஏற்கெனவே வழங்கிவிட்டது" என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .