2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

ஓய்வுபெறுவது குறித்துச் சிந்திக்கிறேன்: ஜோன்சன்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 11 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன், ஒவ்வொரு போட்டியுமே தனது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையுமென்ற எண்ணம் காணப்படுவதாக ஒத்துக் கொண்டுள்ளார்.

34 வயதான மிற்சல் ஜோன்சன், இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்தித்திருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார். குறிப்பாக, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், ஷேன் வொற்சன், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த எண்ணம் அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், தொடர்ந்தும் விளையாடிவரும் ஜோன்சன், நியூசிலாந்துக்கெதிராக பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், சிறப்பான பந்துவீச்சை வழங்கி, வெற்றிக்குப் பங்களித்திருந்தார்.

ஓய்வு பற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், 'அதைப் பற்றி நான் அனேகமான நாட்களில் சிந்திக்கிறேன். ஓய்வை நோக்கிச் செல்கின்றதென நினைக்கிறேன். ஆனால், உண்மையைச் சொல்வதனால், ஒவ்வொரு போட்டியிலும் பங்குபற்றி, அவற்றில் மகிழ்ச்சியாக இருக்க முயல்கிறேன்" எனத் தெரிவித்தார்.

அத்தோடு, எந்தவொரு போட்டியுமே தனது இறுதிப் போட்டியாக அமையுமெனத் தெரிவித்த அவர், ஆனால், இன்னமும் கிரிக்கெட் விளையாடுவதை மகிழ்வாக எண்ணுவதாகவும், சவால்களை மகிழ்வுடன் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்வை அவுஸ்திரேலியாவில் வைத்து ஆரம்பித்ததை நினைவுகூர்ந்த அவர், தனது இறுதிப் போட்டியையும் அவுஸ்திரேலியாவில் வைத்து விளையாட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X