Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
George / 2015 நவம்பர் 13 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரியும், வடமாகாணம் முழுவதுமாக இன்று வெள்ளிக்கிழமை (13) அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலால் யாழ்ப்பாணம் முடங்கியது.
இந்த ஹர்த்தாலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன.
காலையில் ஒன்றிரண்டு பஸ் சேவைகள் நடத்தப்பட்ட போதும் அதன்பின்னர், எவ்வித பஸ் சேவைகளும் நடத்தப்படவில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. அரச நிறுவனங்களிலும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவுள்ளது.
அவசர தேவை கருதி ஓரிரு மருந்தகங்கள் மாத்திரம் திறக்கப்பட்டுள்ளன. மற்றைய அனைத்தும் செயலிழந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .