Shanmugan Murugavel / 2015 நவம்பர் 16 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய நான்காவது நாளில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அடம் வோஜஸ் ஆகியோர் பெற்ற சதங்களின் உதவியுடன், அவுஸ்திரேலிய அணி பலமான நிலையில் காணப்படுகிறது.
எனினும் போட்டியானது, வெற்றி தோல்வியற்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
6 விக்கெட்டுகளை இழந்து 510 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 624 ஓட்டங்களைப் பெற்றது.
முச்சதம் பெறும் வாய்ப்பை 10 ஓட்டங்களால் தவறவிட்ட றொஸ் டெய்லர், இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். தவிர, கேன் வில்லியம்ஸன் 166, டொம் லேதம் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், மிற்சல் ஸ்டார் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன் 3 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட், மிற்சல் ஜோன்சன், மிற்சல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முதல் இனிங்ஸில் 559 ஓட்டங்களுக்குத் தனது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்த நிலையில், 65 ஓட்டங்களால் பின்னிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், 3ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த ஸ்மித், வோஜஸ் இருவரும், பிரிக்கப்படாத 212 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களுடனும் அடம் வோஜஸ் 101 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.
நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்ற் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .