என் மனைவி ஹவ்லத்
21-11-2015 01:37 PM
Comments - 0       Views - 622

காலை எழுந்து வந்து
கனிவுடனே என்னை எழுப்பி
பாலைக் கரம் ஏந்தி
பனிவுடனே வந்து நிற்பாள்.

வேலை நான் செல்ல
வேண்டும் பணி செய்து
வாலை வந்தெனக்கு
வழிகாட்டி நின்றிடுவாள்.

மாலை வரும் பொழுது
மகிழ்வுடனே எனை அணைத்து
சோலை மணம் பரப்ப
சொந்தம் கொண்டாடிடுவாள்.

ஏழை என் மனதை
என்னாளும் மகிழ்வித்து
ஓலைக் குடிசையிலே
ஒற்றுமையாய் வாழுகிறாள்.
 

-பி.எம்.எம்.ஏ.காதர்

 

"என் மனைவி ஹவ்லத்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty