தலையெழுத்து
21-11-2015 02:46 PM
Comments - 0       Views - 565இகழுத்தில் கிடந்த தாலியும் - வங்கிக்
கணக்கில் ஏலம் போனது – உழைத்துக்
குடி காக்க வேண்டிய தந்தையும்
குடி வீடு குடியேறிவிட
படித்துப் படித்து
பல்கலையும் முடித்து
வேலையொன்றும் கிடைத்திடாமல்
தம்பியும் - வீட்டு
மூலையில் சுருண்டுவிட்டான்.

கடைசித் தங்கை காவியா
அம்மா, பசிக்கு உணவு தருவியா
சேலை முந்தானை பிடித்து
இன்னும் அழுதபடி.....
சுடலை செல்லும் வயசிலும்
மணப்பெண்
படலை தாண்ட வழியின்றி
விடலை தாண்டியும் வீட்டில்
முடங்கியே கிடக்கிறேன்.

சீதனப்பேய் விரித்த
வ(வி)லையதில் சிக்கிய
கன்னிமானாய்....
இதுதான் என்
தலையெழுத்துப் போலும

-மல்லாவி கஜன்

"தலையெழுத்து" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty