2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 23/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடலத் தூய்மை மட்டும் இருந்தால் போதாது. பேசும் சொற்களிலும் தூய்மை துலங்க வேண்டும். நல்ல விடயங்களை ஆரம்பிக்கும் போதே சிலர் அபசகுணமாகப் பேசுவதுண்டு. இயல்பாகவே நல்ல வார்த்தைகளைப் பேசுபவர்கள் சபை நடுவே பிறர் முகம் சுழிக்குமாற் போல் பேசமாட்டார்கள்.

கண்டபடி பேசினால் சபையில் முதன்மை பெற்றுவிடலாம் என நினைக்கும் பிரகிருதிகளும் இருக்கின்றனர். 

முதன்மையாளராக வரவிரும்பும் இத்தகையவர்கள் மௌனமாக இருந்தாலே போதும், மற்றையவர்கள் உரிய கௌரவம் கொடுப்பார்கள். அதற்காக கலகலப்பாக பேசக்கூடாது என்பதில்லை. 

உரிய நேரத்தில் சபையறிந்து சுவைப்படப் பேசுதலே சிறப்பு. நல்ல பேச்சுக்கு வீச்சு அதிகம்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .