இலை
23-11-2015 10:25 AM
Comments - 0       Views - 34

கட்டில் ஓர் இலை. இந்த இலையில்தான் நாம் ஒவ்வொரு இரவும் ஏறி உறங்குகிறோம்.
இந்த இலை எந்தமரத்தின் இலை. இந்த அறையின் இலை.
இந்த அறையின் இலையில் நாங்கள் புழுக்களைப் போல நெளிந்து கொள்ளுங்கால்; இந்த இலையைப் புசிக்கிறோம்.
நாம் எப்படித்தான் இதனைப் புசித்தாலும், தன்னளவில் தீராத இந்த இலை,
இந்த அறைக்குள் முளைத்திருந்து, நம்மை எப்போதும் வரவேற்று, தன்னில் உறங்க இடம் தந்து, நம்மை மெச்சுவதைப் பார்த்தால்,
இந்த இலை பற்றி நான் எழுதாமல் இருப்பது,
நான், நெஞ்சால் அணைக்கும் பூப்பந்தே, உன்னைத் தொடாமல், உன்னை எடுத்து என் கண்ணில் எறிந்து கனவுகளுக்கு உணவு வழங்காமல் இருப்பதற்கு ஒப்பாகும்.
உன்னைப் பொறுத்தவரை நான் இப்போதும் பந்து விளையாடும் குழந்தைதான். இருந்தாலும், நான் எழுத்தும் விளையாடுகிறவன். அடிக்கடி என் கையில் இரத்தம் சிவப்பது, கோபமுற்ற எழுத்துகள் என்னைக் குத்துவதாலேயே...
அதிகம் ஆத்திரமுள்ள எழுத்து 'கூ' நுளம்பு மாதிரி கொஞ்சம் பிசகினால் குத்திவிடும்.
அதனால், அதனை விலக்கிவிட்டு இந்த இலையைப்பற்றி எழுத நினைக்கையில், நேற்றிரவு, நீ இந்த இலைக்கு வராமல், வேறு எங்கோ சென்றுவிட்டாய், ஏன்?
நான் தனியே கிடந்து, இந்த இலையில் உருண்டு, தலையணைகள் தட்டி, தலையில் நோவு.
கொஞ்சம் பிடித்துவிடு, தலை இன்னும் நன்றாக இயங்கட்டும். இந்த இலைபற்றி இனிதே எழுத இன்றைக்காவது.

"இலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty