2026 மார்ச் 18, புதன்கிழமை

கிளிநொச்சி பொறியியற்பீடம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 23 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் கட்டடத் தொகுதி, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரயெல்லவினால் ஞாயிற்றுக்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்கெனவே அறிவியல் நகரில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், பொறியியற் பீடத்தின் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்து, தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடமானது 2015 -2016 கல்வியாண்டு மாணவர்களை முதன்முதலாக உள்வாங்கி ஆரம்பிக்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X