Shanmugan Murugavel / 2015 நவம்பர் 23 , பி.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
இஸ்லாமிய ஆயுத அமைப்பு என தன்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு, உலகிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்தது 56 மில்லியன் முஸ்லிம்களின் ஆதரவு, அவ்வமைப்புக்கு உண்டு என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் பிரபலமான கருத்துக்கணிப்பு நிறுவனமான பி.ஈ.டபிள்யூ கருத்துக்கணிப்பு நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லெபனான், இஸ்ரேல், பலஸ்தீனம், பேர்க்கினோ பாஸோ, நைஜீரியா, மலேஷியா, பாகிஸ்தான், துருக்கி, ஜோர்தான், இந்தோனேஷியா, செனகல் ஆகிய 11 நாடுகளிலேயே, இந்தக் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது 'நேர்முகமான" எண்ணம், 'மறைமுகமான" எண்ணம், 'தெரியவில்லை" ஆகியன மூன்று தெரிவுகள் வழங்கப்பட்டன.
இதில், பாகிஸ்தானின் 9 சதவீதத்தினர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கின்றனர்.
இந்த நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீதான ஆதரவு நிலை:

(மட்டந்தட்டுதல் காரணமாக, சில இடங்களில் 100 சதவீதத்துக்கும் அதிகமாகக் காணப்படலாம்.)
இதன்படி, பெரும்பாலான நாடுகளில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவை, முஸ்லிம்கள் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அவ்வமைப்பின் மீது, நேர்மறையான எண்ணங்களையே கொண்டிருக்கிறார்கள்.
இதில், முஸ்லிம்களின் ஆதரவு அளவு என, சில நாடுகளில் தனியான அட்டவணையும் வழங்கப்படமுடியும். பாகிஸ்தான், துருக்கி, ஜோர்தான், இந்தோனேஷியா, செனகல் போன்ற நாடுகளில், முஸ்லிம்களிடம் மாத்திரமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஏனைய நாடுகளின் நிலைமை பின்வருமாறு:

இதன்படி, பெரும்பான்மையான முஸ்லிம்களின் எதிர்ப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மீது காணப்படுகிறது.
எனினும், காணப்படும் குறைவான ஆதரவு கூட, 56 தொடக்கம் 65 மில்லியன் முஸ்லிம்களின் ஆதரவாக அமையுமெனக் கணிக்கப்படுகிறது. உதாரணமாக, பாகிஸ்தானில் 9 சதவீதம் மாத்திரமே ஆதரவு காணப்படுகின்ற போதிலும், அது 17 மில்லியன் மக்களை விட அதிகமானதாகும். இந்தோனேஷியாவில் ஏறத்தாழ 9 மில்லியன் முஸ்லிம்களும் துருக்கியில் 6 மில்லியன் முஸ்லிம்களும் பலஸ்தீனத்தில் 3 மில்லியன் முஸ்லிம்களும், இவ்வாறான ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன்.
தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆழமாக வேரூன்றியிருக்கின்ற நாடுகளான சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலும், ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, எகிப்து, யேமன், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், குவைத், கட்டார், பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்காத நிலையில், அவ்வமைப்புக்கான ஆதரவு, இன்னமும் அதிகமாக இருக்குமெனக் கணிக்கப்படுகிறது.
இதில், சுவாரசியமான அம்சமாக, பேர்கினோ பாஸோவைச் சேர்ந்த 5 சதவீத கிறிஸ்தவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் 29 சதவீதம் பேர், முடிவேதும் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர். அதேபோல், நைஜீரியாவைச் சேர்ந்த 7 சதவீத கிறிஸ்தவர்கள், ஆதரவு நிலைப்பாட்டையும் 22 சதவீதம் பேர், முடிவற்ற நிலையையும் கொண்டுள்ளனர். மலேஷியாவைச் சேர்ந்த 6 சதவீத பௌத்தர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ஆதரவாகவும் 29 சதவீதம் பேர், முடிவற்றவர்களாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .