2024 மே 08, புதன்கிழமை

புத்துயிர் அளிக்க வேண்டும்

Sudharshini   / 2015 நவம்பர் 25 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

'திணைக்களங்கள் மற்றும் அரச துறைகளில் தொழில்புரிபவர்களில் சிலர் வட்டமொன்றுக்குள் வாழ்பவர்களாகவே உள்ளனர். இவர்கள் புத்துயிர் பெற வேண்டுமாயின் தம்முள் மறைந்து கிடக்கும் கலைத்திறமைகளை வெளிக்கொணர்வதுடன் இவர்களுக்காக ஒவ்வொருவருடமும் கலை நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்' என நுவரெலியா மாநகர சபை முதல்வர் மகிந்த தொடம்பே கமகே தெரிவித்தார்.

'இவர்கள், ஒரே வாழ்க்கை வட்டத்துக்குள் முடங்கிக்கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிக வேலைப்பழு காரணமாக அவர்களின் மன நிம்மதி சீர்குலைந்துள்ளது. தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு கலை விழாக்கள் நடத்தப்படுவதன் மூலம் அவர்கள் புத்துயிர் பெற்று சிறப்பாக தமது வேலைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்' என்றும் அவர் கூறினார்.

'நுவரெலியா மாநகர சபை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கலை விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் நுவரெலியா மாநகர சபை புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.   இதன்போது ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், விளையாட்டுதுறை சாதனையாளர்கள் என பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'இவ்வாறான கலை நிகழ்வுகளுக்கூடாக அவர்கள் புத்துணர்ச்சி பெற்று தமது வேலைகளையும் சிறப்பாக செய்ய முடியும்.

கலையின் மூலம் பலரது மன ஆற்றலையும் திறமைகளையும் வெளிக்கொணர முடியும். எமது மாநகர சபையில் பல திறமைசாளிகள் இனங்; காணப்பட்டுள்ளனர். எதிர்காலங்களில் அவர்கள்  கலைத்துறையில் முன்நோக்கி செல்வதற்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம்.

சிறந்த பாடகர்கள், அறிவிப்பாளர்கள், நடிகர்கள் என பல் திறமை கொண்டவர்கள் இனங்; காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான கலை விழாக்கள் அனைத்தும் அரச திணைக்களங்களிலும் அரச நிறுவனங்களிலும் வருடத்துக்கு ஒருமுறை நடத்த வேண்டும். அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கு சேவை செய்கின்ற இந்த அரச ஊழியர்கள் இன்னும் சிறந்த மனோபாவத்துடன் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்'  

கலையின் மூலம் பல சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X