2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இறந்தவர்களுக்கு அஞ்சுலி செலுத்த உரிமை உண்டு

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதனை யாரும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இறந்தவர்களை வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது. அவர்களை விற்பனைப் பொருளாக கையாள்வதையும் கைவிடவேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், இறந்தவர்களுக்காக அவரது உறவுகள் அஞ்சலி செலுத்துவதை யாரும் தடுக்க முடியாது. அது அவர்களின் முழுமையான உரிமையாகும். அதனை பிரபல்யப்படுத்தி வியாபாரம் ஆக்கக்கூடாது என்றும் தவராசா குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்பு என்றும்  எனவே மரணித்த புலிகளை பொது இடங்களில் நினைவுகூருவது, சுவரொட்டிகளை ஒட்டுவது சட்டத்துக்கு எதிரானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தவராசா இவ்வாறு கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .