2024 மே 03, வெள்ளிக்கிழமை

வரலாற்றுச் சாதனை படைத்த சென்.மேரிஷ்

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தால் பிரிவு – 2 அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கொழும்பு லெவன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது.

இந்த இறுதிப்போட்டி அரியாலை கால்ப்பந்தாட்ட மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை நடைபெற்றது. மொத்தமாக 74 அணிகள் பங்குபற்றிய இந்தச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் கொழும்பு லெவன் ஸ்ரார்ஸ் அணியும் நாவாற்துறை சென்.மேரிஷ் அணியும் மோதின.

முதற் பாதியாட்டத்தில் சென்.மேரிஷ் அணியின் வீரன் செபமாலைப்பிள்ளை யூட் அடித்த கோல் ஓவ் சைட் கோல் என நடுவரால் அறிவிக்கப்பட, முதற்பாதியாட்டம் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தின் சென்.மேரிஷ் அணி வீரர் ஒருவர், விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நடுவரால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 10 அணிகளுடன் சென்.மேரிஷ் அணி விளையாடியது. இரண்டாவது பாதியாட்டத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை. இதனால் மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதில் கொழும்பு லெவன் அணி 1 கோலைப் போட்டது. எனினும் அதற்கு ஈடுகொடுத்து ஆக்கிரோஷமாக ஆடிய சென்.மேரிஷ் அணிக்கு, எஸ்.நிதர்சன் ஒரு கோலை அடித்தார்.

ஆட்டம் 1:1 என்று சமநிலையில் இருந்தமையால், சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் சென்.மேரிஷ் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம் பிரிவு – 2 தேசிய சம்பியனாக சென்.மேரிஷ் அணி மாறியது.

வெற்றிபெற்ற சென்.மேரிஷ் அணிக்கு 2 இலட்சம் ரூபாயும், இரண்டாம் இடம்பெற்ற கொழும்பு லெவன் ஸ்ரார்ஸ் அணிக்கு 1 இலட்சம் ரூபாயும் பணப்பரிசில் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .