2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய பள்ளிவாயலுக்கான அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2015 நவம்பர் 29 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு நகரிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக்கட்டடத்தை  நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம்  இடம்பெற்றது.

மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் சலாம் மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் கலந்துகொண்டதுடன், மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1896ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்ட மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை தொடர்பில் தெளிவுப்படுத்தியதுடன், புதிய கட்டடம் அமைப்பதன் அவசியம் பற்றியும் தற்போதைய பள்ளி நிர்வாக சபையினர் அமைச்சர் ரிசாட்; பதியுதின் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

நிர்வாக சபையினர் விடுத்த கோரிக்கையையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் கட்டார் நாட்டின் தனவந்தன் ஒருவரின் நிதியொதுக்கீட்டில் இந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .