2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

தாய் மொழி தமிழை நாம் வளர்க்க வேண்டும். அதற்கு மாறாக நாம் செயற்படுவது சிறந்தது அல்ல. தேசியக் கீதம் சிங்களத்தில் இசைக்கப்பட்டது கவலையளிக்கிறது. நாங்கள் சிங்கள மொழியை எதிர்ப்பவர்கள் அல்ல. எமது உரிமைகளை நாமே மறுக்கின்றோம். இப்படியானால் எப்படி தாய் மொழியை வளர்ப்பது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.

திருகோணமலை தோப்பூர் அல் ஹம்றா மத்தியக் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழா இன்று செவ்வாய்க்கிழமை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இதில்,கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மூதூர் கல்வி வலயமானது மிகவும் மின் தங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் யுத்தத்தில் இருந்து மீண்ட பிரதேசமாக காணப்பட்டமையாகும்.இப்பாடசாலை முப்பது வருட யுத்தத்தில் படையினர் வசமாக இருந்துள்ளது. இங்கு பௌதீக வளங்களை ஏற்படுத்தும் தார்மீகப் பொறுப்பு கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கே உரியது.  

அத்தோடு, கிழக்கில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் தேசியக் கீதத்தை தமிழ் மொழியிலேயே  இசைக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .