Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலிம்பிக் பதக்கம் வென்ற தென்னாபிரிக்க தடகள வீரரான ஒஸ்கார் பிறிஸ்டோரியஸ் வேண்டுமென்றே தனது நண்பியைக் கொலை செய்தார் என்று தென்னாபிரிக்க மேன்முறையீட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது நண்பியான ரீவா ஸ்டீன்கம்பை, பூட்டப்பட்டிருந்த கதவினூடாக பிறிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் உள்நோக்கமற்ற கொலையையே புரிந்தார் என தீர்ப்பு வழங்கப்பட்டு, ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ஒரு வருட சிறைத்தண்டனையின் முடிவின் பின்னர் அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளார்.
இதனையடுத்து, மேன்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தில் அரச வழக்கறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முன்னர் தீர்ப்பு வழங்கிய நீதவான், சட்டத்துக்கு பாரிய தவறுகள் இழைத்ததாக கூறப்பட்டுள்ளதோடு, பிறிஸ்டோரியஸின் வாதங்கள் நம்பத்தகுந்தவையல்ல எனவும் நீதவான் தெரிவித்தார்.
பூட்டியிருந்த அறைக்குள் இருந்து ஆபத்து காணப்பட்டதாகவும் அதனாலேயே துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவித்திருந்தார். எனினும் அந்த அறையில் இருந்து எதிர்ப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் நான்கு தரம் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையெனவும் நீதவான் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .