2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

பீபாவுக்கு இவ்வாண்டில் $ 187 மில். நட்டம்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 03 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் (பீபா), இவ்வாண்டில் மாத்திரம் 187 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (87 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்) அதிகமான நட்டம் ஏற்படுமென அறிவிக்கப்படுகிறது.

பல்வேறுபட்ட ஊழல், மோசடி, முறைகேடு சம்பந்தமான குற்றச்சாட்டுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பீபா, அனுசரணையாளர்களிடமிருந்து அதிக அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. பல அனுசரணையாளர்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்தனர்.

முதல்நிலை அனுசரணையாளர்களான எமிரேட்ஸ், சொனி இரண்டும், இரண்டாம் நிலை அனுசரணையாளர்களான கஸ்ட்ரோல், கொன்டினென்டல், ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள், அனுசரணையிலிருந்து விலகியிருந்ததோடு, அவர்களை மீள்நிரப்ப, பீபாவால் முடிந்திருக்கவில்லை.

தவிர, ஏராளமான வழக்குகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கான செலவுகளும் பீபாவுக்கு அதிகரித்திருந்தது. இதனையடுத்தே, அவ்வமைப்புக்கு, நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

2001ஆம் ஆண்டுக்குப் பின்னர், பீபா நட்டத்தை அறிவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்தாண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத்திலிருந்து மாத்திரம், 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தையும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபத்தையும், பீபா பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X