2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

160 பள்ளிவாசல்களை மூடுகிறது பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 03 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் 13ஆம் திகதி பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, பிரான்ஸிலுள்ள ஏறத்தாழ 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படைவாத, தீவிரவாதக் கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பும் பள்ளிவாசல்களும் அனுமதிபெறாத பள்ளிவாசல்களுமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான இமாம்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் ஹஸன் எல் அலோவுய், இந்தத் தகவலை வெளியிட்டார்.

உள்விவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும், உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில், 100 தொடக்கம் 160 வரையிலான பள்ளிவாசல்களை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதிப்பத்திரமின்றி இயங்குதல், வெறுப்பைப் பரப்புதல், ஏனைய முஸ்லிம்களை மத வெறுப்பாளர்களெனக் குற்றஞ்சாட்டுதல் ஆகியவற்றின் காரணமாகவே, இவை மூடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய முஸ்லிம்களை மத வெறுப்பாளர்கள் எனக் குற்றஞ்சாட்டுவது, பிரான்ஸில் அதிகரித்துள்ளதோடு, பிரிவினைக்கும் பாகுபாட்டுக்குமாகப் பயன்படுத்தப்படுகிறது.

'இவ்வாறான பேச்சுகள், இஸ்லாமிய நாடுகளில் கூட அனுமதிக்கப்படக்கூடாது. பிரான்ஸ் போன்ற மதச்சார்பற்ற நாடுகளைப் பற்றித் தெரிவிக்கவே தேவையில்லை" என அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளின் ஓர் அங்கமாகவே, 3 பள்ளிவாசல்களை ஏற்கெனவே மூடியுள்ளதாகவும், அவை மூடப்படும்போது, றிவோல்வர்கள், ஜிஹாதி ஆவணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X