Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
1974 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் நடைபெற்று இன்றுடன் 41 வருடங்கள் நிறைவடைகின்றன. இவ்விபத்தினால், விமானிகள் உட்பட 191 பேர் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். இவர்களில் 190 பேரின் உடல்கள்;, கொத்தலென கந்த என்று அழைக்கப்படும் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டன.
அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமான பணிப் பெண்ணின் உடலை, அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றார்.
விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் சில்லு ஒன்று மட்டும் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த சில்லானது, இச்சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில், நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட டொலர்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில், நினைவுத்தூபி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.
















அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .