2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

ஊக்கமருந்துப் பரிசோதனையில் சிக்கினார் குசால்

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையிலேயே, குசால் ஜனித் பெரேராவின் ஊக்கமருந்துப் பாவனை கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான குழாமில், குசால் பெரேரா இடம்பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்குச் சென்றிருந்தார். ஆனால், தற்போது அவரது ஊக்கமருந்துப் பாவனை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமிலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்.

குசால் பெரேராவுக்குப் பதிலாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் சில்வா, நியூசிலாந்துக்குப் பயணமாகவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X