விபத்து ஏற்படாமல் எப்படி? Video
09-12-2015 05:09 PM
Comments - 0       Views - 1184

-எம்.றொசாந்த்

கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனர்.

அக் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை. சிவப்பு விளக்கு ஒளிர்வதுடன், சமிஞ்சை ஒலி எழுப்படும். அது மட்டுமே அக் கடவையில் ரயில் வருவதற்கான அறிகுறிகளாகும்.

அதனை சிலர் கவனத்தில் எடுக்காது அக்கடவையினை கடந்து செல்கின்றனர். இதனால் உயிராபத்து ஏற்பட கூடிய விபத்துக்கள் இடம்பெறும் அபாயம் உள்ளது.

இப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக கடந்த மாதம் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

"விபத்து ஏற்படாமல் எப்படி? Video" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty