2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

இஸ்லாத்தில் பாரிய பிரச்சினையுண்டு சீர்திருத்த வேண்டும்: அபொட்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 09 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட், இஸ்லாம் மீதான விமர்சனங்களை முன்வைத்துள்ளதோடு, அம்மதத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள டொனி அபொட், முஸ்லிம்களைச் சிறுமைப்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்லாத்தில் காணப்படும் பாரிய பிரச்சினைகள் குறித்து மேற்கு, தொடர்ந்தும் மறுப்பில் காணப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.

பெரும்பாலான முஸ்லிம்கள், பயங்கரவாதத்தை முழுமையாக நிராகரிக்கும் நிலையில், சிலர், மதத்துக்கு எதிரானவர்களின் மரணத்தை நியாயப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்லாம் மதத்தில், சீர்திருத்தமும் தெளிவும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அபொட், பல்வகைமைக்கான ஏற்றுக் கொள்ளும் இயல்போ அல்லது நாட்டையும் மதத்தையும் வேறுபடுத்தும் மாற்றங்களே அங்கு இடம்பெற்றிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் வாழும் முஸ்லிம்கள், அவுஸ்திரேலியாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமெனவும், மேற்கத்தேய நாகரிகத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமெனவும் கோருவது, கலாசாரத்துக்கு மதிப்புக் கொடுக்காத நிலையன்று எனத் தெரிவித்த அவர், எல்லாக் கலாசாரங்களும் ஒரே சமநிலையானவையன்று எனக் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .