டெங்கு நோயாளிகள் அதிகரிப்பு...
10-12-2015 10:00 AM
Comments - 0       Views - 167

தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்தார். 

இவ்வருட ஜனவரி மாதம் தொடக்கம் இம்மாதம் வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 8,590 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு, செவ்வாய்க்கிழமை (08) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனடிப்படையில் கொழும்பு நகரில் 2,360 டெங்கு நோயாளர்களும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 6,230 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவற்றில் இம்மாதத்தில் மாத்திரம் அதாவது எட்டே நாட்களில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் சுமார் 49 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தில் 26,243 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றில் கொழும்பு நகரிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,  அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் 3,649 டெங்கு நோயாளர்களும் யாழ்ப்பாணத்தில் 1,626 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 

அம்பாறை மாவட்டத்தில் 56 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவே நாடளாவிய ரீதியில் மிகக் குறைவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட மாவட்டம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் புள்ளிவிவரத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

"டெங்கு நோயாளிகள் அதிகரிப்பு..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty