2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

கடாபியின் மகன் ஹன்னிபல் லெபனானில் கடத்தப்பட்டு விடுதலை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானில் ஆயுதக்குழுவொன்றினால் கடத்தப்பட்டிருந்த முன்னாள் லிபியத் தலைவர்  முகம்மது கடாபியின் மகன் விடுவிக்கப்பட்டிருந்தார். இவரைக் கடத்திய குழு, லிபியாவில் பத்தாண்டுகளுக்கு முன் காணாமல் போன ஷியா மதகுருவின் தகவல்களைக் கோரியிருந்தது.

நேற்று, உள்ளூர் அல்-ஜடீட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி ஒன்றில் தோன்றிய ஹன்னிபல் கடாபி, மதகுரு மௌசா அல்-சதார் பற்றிய தகவல்களை வைத்திருப்பவர்களை முன்வருமாறு கோரியிருந்தார்.

நான் தேவையானவர்கள் என நினைக்கும் மக்கள் கேட்பார்கள் என நம்புவதாகவும் அவர்கள் ஆதாரங்களை வைத்திருப்பதாகவும் அவற்றை தாமதமில்லாமல் உடனடியாக வெளிக்கொணருமாறும் இந்த வேதனை போதுமானது எனவும் தெரிவித்திருந்தார். அநீதி போதும், மக்கள், தங்களது மகனை (மதகுரு) கேட்கிறார்கள் என அவர் காணொளியில் மேலும் தெரிவித்திருந்தார்.

அடிவாங்கியர் போன்றும் கறுப்பு கண்களுடனும் கடாபி தோன்றியபோதும் அவர் அந்தக் காணொளியில் அவர் நல்ல உடல் நலத்துடனும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர், பால்பெக் நகரத்தில் விடுவிக்கப்பட்டு பெய்ரூட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கடாபி மணமுடித்த லெபனானிய பெண்ணும் கடத்தப்பட்டாரா என்பது தெளிவில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் லெபனானின் பிரபலமான ஷியா மதகுருவாக அறியப்படுகின்ற அல்-சதார், 1978ஆம்ந ஆண்டு திரிபோலிக்கு சென்றிருக்கையில் வேறு இருவருடன் சேர்த்து காணாமல் போயிருந்தார். இதற்கு முகம்மர் கடாபி மீதே லெபனான் பழிசுமத்தியிருந்தது.

1975 ஆம் ஆண்டு பிறந்த ஹன்னிபல், கடாபியின் மனைவி சபியா, மகன் மொஹம்மத், மகள் ஆயிஷா ஆகியோர், 2011ஆம் ஆண்டு திரிபோலி வீழ்ச்சியினையடுத்து அயல்நாடான அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X