2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர்?

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 13 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் தற்போதைய முழங்கால், இடுப்பு பிரச்சினைகள் தீராதுவிட்டால், இந்தியாவுக்கெதிராக எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், அணிக்கு தலைமைதாங்க வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு, வோணர் அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர் செயற்படும் சந்தர்ப்பத்தில், அச்சந்தர்ப்பமே, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மெல்பேர்ண் “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியிலோ அல்லது சிட்னியில் இடம்பெறவுள்ள புதுவருட டெஸ்ட் போட்டியின்போதான ஸ்மித்தின் பங்களிப்பில் சந்தேகமில்லை எனினும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கும் மார்ச் மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபது-20 தொடருக்கு முன்னதாக இந்தியாவில் இடம்பெறவுள்ள இருபது-20 சர்வதேசப் போட்டிகளுக்கு முழுமையாகத் தயாராகும் பொருட்டு இந்தியாவுக்கெதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் சில பகுதிகளில் ஓய்வளிக்க அணியின் மருத்துவ பணியாளர்களோ, அணித் தேர்வாளர்களோ தீர்மானிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X