ஃபஷன் பக்கின் ஆடை அணிவகுப்பு
18-12-2015 07:21 PM
Comments - 0       Views - 530

இலங்கையின் முன்னணி சில்லறை ஆடை விற்பனை நிலையமான ஃபஷன் பக்கின், கண்கவர் சேலை வரிசையோடு விருந்துகளுக்கான ஆடை வரிசை மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சாதாரண உடைகளின் வரிசை என்பனவற்றின் ஆடை அணிவகுப்பினை, SERENADE Events ஒழுங்கு செய்திருந்தது. 

அத்துடன் அண்மையில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் பீடம் ஒழுங்கு செய்திருந்த Vibes of Marketing 2015 இலும் ஃபாஷன் பங்காளியாக ஃபஷன் பக் இணைந்திருந்தது. இதன்போதும் கூட ஃபஷன் பக்கானது, சாதாரண நிகழ்வுகளுக்கான ஆடைகள், சேலைகள் மற்றும் பெண்கள் ஆடைகள், என்பனவற்றைக் காட்சிப்படுத்தியதோடு இந்நிகழ்வானது பலகலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இலங்கை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகள் தொடர்பிலான ரசனைப்போக்குக்கேற்ப, தன்னை நகர்த்தியவாறு இலங்கையின் சில்லறை ஆடைவிற்பனைத் துறையில் பாரிய வெற்றிகளைச் சந்தித்து வருகின்றது ஃபஷன் பக். 'நாங்கள் பேசுவதனைப்போல எங்கள் ஆடை வரிசையில் நாங்கள் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம். ஃபஷன் எனும் போது எங்கள் நாடாது மிகவும் உயர் தரத்திலேயே உள்ளது. அதனைப்போலவே எங்களது வாடிக்கையாளரும் அது பற்றிய அறிவு, உணர்வு விருப்பு என்பனவற்றினைக் கொண்டவராக உள்ளார்' என்றார் ஃபஷன் பனக்கின் பணிப்பாளர் ஷபீர் சுபியான்.

எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு, அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட சேலைகள், விசேட வடிவமைப்புக் கொண்ட கரையுடனான சேலைகள், கட்வேர்க் சேலைகள் மற்றும் அலங்கார சேலைகள் என்பனவற்றுடன், அழகிய வடிவமைப்புடன் கூடிய பண்டிகைக்கால சல்வார்கள், என்பனவற்றோடு இப் பண்டிகைக்காலத்துக்கென வடிவமைக்கப்பட்ட மேற்கத்தேய ஆடைவகைகளும் அன்றைய தினம் பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தது. இது ஃபஷன் பக்கானது அனைத்துத் தரப்பினரது தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது என்பதற்கு நல்ல உதாரணமாகும். அன்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து ஆடைகளும் ஃபஷன் பக்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.  

ஃபஷன் பக் 1994ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 7 பேர் கொண்ட குழுவொன்றுடன் பண்டாரவளையில் 500 சதுர அடி விஸ்தீரணங் கொண்ட கடையுடன் ஃபஷன் பக் தனது வர்த்தகத்தை ஆரம்பித்தது. இதன் நிறுவுனர்களான திரு ரிஸால், அஷான் சுபைன் மற்றும் ஏ.ஸீ.எம் சாதீக் ஆகியோரின் அயராத முயற்சியினால் இன்று ஃபஷன் பக் நாடெங்கிலும் 17 கிளைகளைக் கொண்டு பலரது வீடுகளிலும் உச்சரிக்கப்படும் நாமமாகவுள்ளது. நாட்டின் பல்தரப்பட்ட இன மற்றும் கலாசாரப் பின்னணிகளை உடைய, ஆண்களும் பெண்களுமாக 1250 இலங்கையர்கள், ஃபஷன் பக்கில்; பணிபுரிகின்றனர். இது அவர்களுக்கு ஒரு உண்மையான இலங்கை அடையாளத்தை வழங்குகின்றது. மேலதிகமாக, அதன் விநியோக வலையமைப்பில் சுமார் 2000 இலங்கை ஆண்களும் பெண்களும் இணைந்துள்ளனர். தனக்கேயுரியதான கிவோ, போஷ், ஹஷ், ஜொப்ஸ், பிக் பொஸ், ரொக் ஸ்டார், மற்றும் பக் ஜுனியர் போன்ற வர்த்தக நாமங்களையும் அது உற்பத்தி செய்கின்றது.

"ஃபஷன் பக்கின் ஆடை அணிவகுப்பு " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty