2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

எதிர்காலம் குறித்து அச்சம்: வான் கால்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 20 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் நோர்விச் சிற்றி அணிக்குமிடையிலான போட்டியில், யுனைட்டட் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தமையைடுத்து, தனது எதிர்காலம் குறித்து அச்சத்தைக் கொண்டுள்ளதை, அவ்வணியின் முகாமையாளரான லூயிஸ் வான் கால் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவரது பதவி குறித்து அச்சப்படுகிறாரா எனக் கேட்கப்பட்டபோது, 'ஆம், நிச்சயமாக, ஏனென்றால், முகாமையாளர் பதவியில் நம்பிக்கையென்பது முக்கியமானது" எனத் தெரிவித்தார். அவருக்கான மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்படுமா எனக் கேட்கப்பட்டபோது, 'வழங்கப்படுமென நினைக்கிறேன், ஆனால் சொல்ல முடியாது. இந்த உலகத்தில், சொல்ல முடியாது. அந்த முடிவு, என்னிடம் இல்லை, பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

தோல்விகளைச் சந்திக்கும் போது, அழுத்தம் வருவமென்பதை ஏற்றுக் கொண்ட அவர், தனது அணி வீரர்களுக்கும் அது தெரியுமெனக் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை பதவி விலக்கப்பட்ட செல்சி அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, அடுத்த பருவகாலத்தில் வான் காலின் மன்செஸ்டர் யுனைட்டட் ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், புதிய முகாமையாளராகப் பதவியேற்பார் எனச் செய்திகள் உலாவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X