Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 21 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில், துடுப்பாட்டத் தரப்படுத்தலின் முதலிடத்தை, நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெற்றுக் கொண்டுள்ளார்.
போட்டியின் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த நியூசிலாந்துத் தலைவர் பிரென்டன் மக்கலம், 'அரசர்" என வில்லிம்ஸனை வர்ணித்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வது போல, சிறிதுநேரத்தில் வெளியான தரப்படுத்தலில், உலகின் முதல்நிலை வீரராக வில்லிம்ஸன் அறிவிக்கப்பட்டார். முதலிடத்தில் ஜோ றூட், இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார்.
புதிய தரப்படுத்தலின்படி,
கேன் வில்லியம்ஸன், ஜோ றூட், ஏபி டி வில்லியர்ஸ், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வோணர், யுனிஸ் கான், ஹஷிம் அம்லா, அஞ்சலோ மத்தியூஸ், அலஸ்டெயர் குக், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களாகக் காணப்படுகின்றனர்.
பந்துவீச்சாளர்களாக, டேல் ஸ்டெய்ன், இரவிச்சந்திரன் அஷ்வின், ஜேம்ஸ் அன்டர்சன், யாசிர் ஷா, ஸ்டுவேர்ட் ப்ரோட், ஜொஷ் ஹேஸல்வூட், ரவீந்திர ஜடேஜா, ட்ரென்ட் போல்ட், வேர்ணன் பிலாந்தர், டிம் சௌதி ஆகியோர் முதல் 10 இடங்களில் காணப்படுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .