2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்துக்கெதிராக மலிங்க இல்லை?

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான  ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கையணியின் முதன்மை வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டிகளின்போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மலிங்க குணமடையத் தவறியமையை அடுத்தே, அவர் நியூசிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர் இந்தத் தொடரின் மிகுதி போட்டிகளிலும் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலிங்கவுக்கு பதிலாக இலங்கைக் குழாமில் சகலதுறை வீரர் திஸார பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும் இடம்பெறவுள் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கும் இருபதுக்கு-20 சர்வதேச போட்டிகள் இடம்பெறுகின்ற காலத்திலையோ காயத்திலிருந்து குணமடையும் பட்சத்தில் மலிங்க போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .