2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 24 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவியல் முறைப்பாடுகளை, சூரிச் நீதிமன்றத்தில் பதிவுசெய்திருந்தனர். றுபினெனின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்குமாறே, அவர்கள் கோரியிருந்தனர்.

எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அரச வழக்குரைஞர், அவை பொய்யானவை போன்று காணப்படுவதாகத் தெரிவித்து, அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தார்.

அவ்வாறு, 2002ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்குமாயின், பீபா தற்போது எதிர்நோக்கும் குழப்பத்தை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்காது என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X