நீர் வீழ்ச்சியை பார்க்க...
28-12-2015 09:50 AM
Comments - 0       Views - 356

கடந்த வியாழக்கிழமை முதல் நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் பதுளை மாவட்டத்துக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் வருகையால் பதுளை நகர் நிரம்பி வழிவதாக தெரியவருகிறது. பதுளை நகர் மட்டுமன்றி ஹப்புத்தளை, வெலிமடை, வெல்லவாய ஆகிய நகரிலுள்ள சுற்றுலா விடுதிகளும் நிரம்பியுள்ளன.   சுற்றுலாப் பயணிகள் மஹியங்னை, முதியங்கன போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விஹாரைகள் மற்றும் துன்கிந்தை, பம்பரக்கந்தை போன்ற நீர்வீழ்ச்சிகளை அதிகம் பார்வையிட்டனர்.  (பாலித ஆரியவன்ச)

  

"நீர் வீழ்ச்சியை பார்க்க..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty