Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இன்றைய 3ஆவது நாள் முடிவில், அவுஸ்திரேலிய அணி உச்சநிலையில் காணப்படுகிறது.
6 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களுடன் தடுமாற்றத்துடன் இன்றைய நாளைத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்தியது.
7ஆவது விக்கெட்டுக்காக 90 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 271 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் டெரன் பிராவோ 81, அறிமுக வீரர் கிறெய்க் பிறெத்வெய்ட் 59, ஜேர்மைன் பிளக்வூட் 28, ராஜேந்திர சந்திரிகா 25 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், ஜேம்ஸ் பற்றின்சன், நேதன் லையன் இருவரும் தலா 4 விக்கெட்டுகளையும் பீற்றர் சிடில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
280 ஓட்டங்களால் முன்னிலை வகித்த நிலையில், மீண்டும் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாளில் 32 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைக் குவித்துள்ளது. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், 70 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் உஸ்மான் க்வாஜா 61 பந்துகளில் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் கிறெய்க் பிறெத்வெய்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 551 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .