2026 ஜனவரி 01, வியாழக்கிழமை

முதல் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதற்தடவையாக முதற் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25), சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே, பத்தாவது இடத்திலுள்ள சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் பிரதீயீடு செய்துள்ளது.

எனினும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்க முடியும். இந்தத் தொடரில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில், சிம்பாப்வேக்கும் அயர்லாந்துக்கும் அடுத்ததாக, அவர்களின் வழமையான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசை நிலையான பன்னிரண்டாவதுக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த வருட ஆரம்பத்தில், பெப்ரவரி-மார்ச் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ணத்தில் முதற்தடவையாக பங்கேற்ற ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்துடனான போட்டியில் ஒரு விக்கெட்டால் வெற்றியீடியிருந்தது. பின்னர் தொடர்ந்தும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வந்த ஆப்கானிஸ்தான், கடந்த ஒக்டோபர் மாதம், புலாவாயோவில் இடம்பெற்ற ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில், மூன்றுக்கு இரண்டு என்ற ரீதியில் வெற்றி பெற்று, முதற்தடவையாக துணை அங்கத்துவ நாடு ஒன்று, டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடு ஒன்றை இரு நாடுகளுக்கிடையிலான தொடரில் வென்ற சாதனையை ஏற்படுத்தியிருந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X