2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

பெருத்த அவமானம்: பயிற்றுநர்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 28 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து அணிக்கெதிராகக் கிடைத்த தோல்வியை, அவமானந்தரும் தோல்வியெனத் தெரிவித்த இலங்கை அணியின் பயிற்றுநர், இவ்வாறானதொரு பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

'இன்று, மிகவும் அவமானந்தரும் தினமாகும். அது, சற்று ஏமாற்றத்தைத் தந்தது. இந்தளவிலான திறமை வெளிப்பாட்டை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. டெஸ்ட் தொடரிலாவது, அதைச் சமப்படுத்தும் நிலையில் காணப்பட்டோம், வெல்லும் நிலையிலும் காணப்பட்டோம். ஆனால், கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், அவமானந்தரும் பெறுபேறாக இது அமைந்தது" என, ஜெரோம் ஜயரத்ன தெரிவித்தார்.

முதலாவது போட்டியில் இலங்கை அணி 188 ஓட்டங்களைப் பெற்ற போதிலும், ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து 65 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் 10 ஓவர்களில், போட்டியின் போக்கை, இலங்கை இழப்பதாகத் தெரிவித்த ஜயரத்ன, அதன் பின்னர், இனிங்ஸைக் கட்டியெழுப்பும் நிலையே காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் ஓய்வின் பின்னர், அவ்விடங்களில் துடுப்பெடுத்தாட நியமிக்கப்பட்ட லஹிரு திரிமான்ன, டினேஸ் சந்திமால் ஆகியோர், சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாமை பற்றியும், தனது விமர்சனங்களை ஜயரத்ன வெளிப்படுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .