Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 30 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட இந்தக் குழாமுக்குத் தலைவராக கேன் வில்லியம்ஸன் பெயரிடப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் பிரெண்டன் மக்கலம் பங்கேற்கமாட்டேன் என அறிவித்திருந்ததையடுத்து, அவர் குழாமிலும் இடம்பெறவில்லை.
இதேவேளை, காயத்திலிருந்து குணமடைந்த கொரே அன்டர்சன், தனித்து துடுப்பாட்டவீரராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, கிராண்ட் எலியட்டும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். எனினும் காயத்திலிருந்து இன்னும் குணமடைந்து வரும் ஜேம்ஸ் நீஷம், நதன் மக்கலம் ஆகியோரும் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கெதிரான முதலிரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட மற் ஹென்றியும் குழாமில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க தொடரில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்குப் பதிலாக அணித்தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதோடு, குழாமில் சுரங்க லக்மாலும் தனுஷ்க குணதிலகவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையுடான இறுதி இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழாமில் ட்ரெண்ட் போல்ட் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மற் ஹென்றியும் ஜோர்ஜ் வோக்கரும் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இருபதுக்கு-20 குழாம்- கேன் வில்லியம்ஸன் (தலைவர்), கொரே அன்டர்சன், ட்ரெண்ட் போல்ட், கிரான்ட் எலியட், மார்ட்டின் கப்தில், மிட்செல் மக்லெனகன், அடம் மிலின், கொலின் முன்றோ, லுக் ரொங்கி, மிட்செல் சன்டர், இஷ் சோதி, டிம் சௌதி, ரொஸ் டெய்லர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .