2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மீண்டும் சிக்கலில் பிளட்டினி

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 30 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் (பீபா) 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மைக்கல் பிளட்டினி, மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவரான பிளட்டினி, அனைத்து வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும், டிசெம்பர் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், டுபாய் விளையாட்டுச் சபையினால் டுபாயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூகோள கால்பந்தாட்ட விருதுகளில், கடந்த 27ஆம் திகதி, பிளட்டினி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வில், லியனொல் மெஸ்ஸி, அன்ட்ரியா பிர்லோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு வைத்து, தனது தடை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்திருந்த பிளட்டினி, புகைப்படங்களிலும் சிக்கியிருந்தார்.
இதனையடுத்தே, பீபாவினால் வழங்கப்பட்ட தடையை அவர் மீறியுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளதுடன், அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தடை விதிக்கப்பட்ட பிளட்டி, பீபா தலைவர் செப் பிளட்டர் இருவரும், தங்களது தடைகளுக்கெதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X