இரு அளவுகளில் Galaxy S7?
03-01-2016 08:52 PM
Comments - 0       Views - 1876

சம்சுங்கினுடைய Galaxy S7 திறன்பேசியானது இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு வகையானது தட்டையானதாகவும் 5.2 அங்குல திரையைக் கொண்டதாக அமையவுள்ளதுடன் இரண்டாவது Edge வகையிலான திறன்பேசிகளின் முனைகளில் வளைந்ததாக 5.5 அங்குலம் திரையைக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னர், Galaxy S7 ஆனது S6 Edge+ இன் திரை அளவான 5.7 அங்குலமாகவே இருக்கும் என முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

S7 திறன்பேசியை இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடுவது சம்சுங்கின் உத்தியின் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியிட்ட S6 திறன்பேசியை தட்டையான திரை, வளைந்த திரை என வெளியிட்டிருந்தாலும் இரண்டினதும் திரையின் அளவும் 5.1 அங்குலமாகவே இருந்தது.

வெளியாகியுள்ள மேற்படித் தகவல்களின் படி, அப்பிள், ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸை முறையே 4.7 அங்குலம், 5.5 அங்குலம் கொண்ட திரைகளில் வெளியிட்ட உத்திக்கு ஈடுகொடுக்கவே மேற்படித் தயாரிப்புக்கள் என தெரியவருகிறது.

தவிர, 3.3 மில்லியன் S7 திறன்பேசிகளையும் 1.6 மில்லியன் S7 Edge திறன்பேசிகளையும் எதிர்வரும் பெப்ரவரி முதல் சம்சுங் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னர், எதிர்வரும் மார்ச் மாதத்தில் S7 வெளியிடப்படுமெனவும் அப்பிளின் 3D தொடுகை போன்றதான அழுத்தம் உணரும் திரையைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

 

"இரு அளவுகளில் Galaxy S7? " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty