Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வருடம் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத் (பீபா) தேர்தலில் வெற்றிபெற்றால், அச்சம்மேளனத்தை இரண்டாகப் பிளவுபடுத்தவுள்ளதாக, ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல்-காலிபா தெரிவித்துள்ளார்.
ஊழல், மோசடிகள் காரணமாக, பலத்த எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பீபா, தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை, பெப்ரவரியில் நடாத்தவுள்ளது.
இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, ஷேக் சல்மானே கருதப்படுகிறார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்காக, பீபாவை இரண்டாகப் பிளவுபடுத்துவதே தனது நோக்கம் எனத் தெரிவித்தார். விளையாட்டின் நிர்வாகத்துக்காக ஒரு பிரிவும், வணிகத்துக்காக மற்றொரு பிரிவுமாக, இது அமையுமென அவர் குறிப்பிட்டார். 'கால்பந்தாட்ட பீபா", 'வணிக பீபா" என அவை அழைக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
நிதியையும் வணிகத்தையும் வேறு பிரிப்பதனூடாக மாத்திரமே, கால்பந்தாட்டம் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியுமெனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .