Shanmugan Murugavel / 2016 ஜனவரி 03 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகின்ற நிலையில், இன்று சிட்னியில் ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் மேற்கிந்தியத்தீவுகள் அணி, முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில் கார்லோஸ் பிராத்வெயிட் 35 ஓட்டங்களுடனும் தினேஷ் ராம்டின் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, கிரேய்க் பிராத்வெயிட் 85 ஓட்டங்களுடனும் டரன் பிராவோ 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லயோன் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹேசில்வூட், ஸ்டீவ் ஒஃப் கெவி, ஜேம்ஸ் பட்டின்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில், அவுஸ்திரேலிய அணி சார்பாக இரண்டாவது போட்டியில் பங்கேற்ற பீற்றர் சிடிலுக்குப் பதிலாக ஸ்டீவ் ஒஃப் கெவியும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக, ராஜேந்திர சந்திரிக்காவுக்குப் பதில் ஷை ஹோப்பும் இப்போட்டியில் பங்கேற்றனர்.
தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி கொண்ட அவுஸ்திரேலிய அணி, ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .