Gavitha / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தலைமையிலான குழுவினர், நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், முழுமையாக கறுப்பு ஆடையை அணிந்திருந்தனர்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு, கோட்டையில் நடத்தப்பட்டது. அதில், கலந்துகொண்டவர்களே இவ்வாறு கறுப்பு ஆடை அணிந்திருந்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு தேசியக்கொடியை உயர்த்துமாறு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அப்படியாயின் பதவியேற்பு, தேசிய வைபவமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
தேசிய வைபவங்களில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்படும் என்பது அமைச்சருக்கு தெரியாதா என்று வினவிய, உதய கம்மன்பில, இவ்வாறான வைபவங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .