Gavitha / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காகத் தனது செயற்றிறன் மற்றும் ஆற்றல் என்பன, சேவை மூப்பினைவிடப் பெறுமதி வாய்ந்தவையெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'நீங்கள் சேவையாற்றுவது எனக்கு அன்றி, நாட்டுக்கே என்பதை நிதமும் மனதில் நிறுத்த வேண்டும்' எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் புதுவருட கடமைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில். நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் நிருவகிக்கும் பிரதான மத்திய நிலையமாக ஜனாதிபதி அலுவலகத்தில் கடமையாற்றும் அனைவரும் வீண்விரயத்தையும் ஊழலையும் இல்லாதொழித்து மக்களின் குரல்களுக்கு செவிமடுக்க வேண்டும்.
அரச நிறுவனங்களை நிறுவகிக்கும் நாட்டின் பிரதான நிறுவனமான ஜனாதிபதி அலுவலகத்திடம், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கான முக்கியமானதொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தான், ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ததன் பின் கடந்து சென்ற ஓராண்டுக்குள் நாட்டில் ஒரு சில மாற்றங்களை மேற்கொள்ள முடிந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக ஜனாதிபதி அலுவலகத்தின் பணிக்குழாத்தினர் வழங்கிய பங்களிப்பை பாராட்டினார்.
அரச சொத்துக்கள், வளங்கள் என்பன சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் நாட்டின் பிரதான நிறுவனமாக ஏனைய அரச நிறுவனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்வதற்கு எப்போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் ஊழியர்கள் நினைவில் நிறுத்த வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .